Powered By Blogger

Saturday, September 25, 2010

mouse tips

சில வேளைகளில் மவுஸ் மயக்க மருந்து சாப்பிட்டது போல என்ன செய்தாலும் நகராது. கர்சர் ஒரே இடத்தில் அப்படியே இருக்கும். வெகுநாட்கள் மவுஸைச் சுத்தம் செய்யாமல் விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சிறிய பாகங்கள் மவுஸினுள் மோசமாகிப் போனாலோ அல்லது மவுஸ் சார்ந்த சாப்ட்வேரில் பிரச்னை ஏற்பட்டாலோ இந்த நிலை ஏற்படலாம். அப்போது மவுஸ் கர்சரின் நகர்த்தலை கீ போர்டு மூலம் மேற்கொள்ளலாம். இந்த கீ போர்டு மவுஸ் மூலம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். கீ போர்டு மவுஸை இயக்கத்திற்குக் கொண்டு வரக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும். 


முதலில் இந்த மாற்றங்களை மேற்கொள்ள அட்மினிஸ்ட்ரேட்டராக நீங்கள் கம்ப்யூட்டருக்குள் நுழைய வேண்டும். அதன்பின் கீ போர்டு மவுஸ் செட் செய்வதற்கு Alt+Shift+NumLock கீகளை ஒரு சேர அழுத்தவும். உடன் ஒரு சிறிய மவுஸ்கீஸ் என்ற பெட்டி கிடைக்கும். இதில் மவுஸ் கீகளை செயல்படுத்த ஓகே பட்டன் அழுத்தவும். கீகளை மவுஸ் கர்சர் இயக்கத்திலிருந்து விடுவிக்க கேன்சல் பட்டன் அழுத்த வேண்டும். செட் செய்வதற்கு செட்டிங்ஸ் பட்டன் அழுத்தவும். செட்டிங்ஸ் கட்டத்தின் மூலம் மவுஸ் கர்சரை இன்னும் கொஞ்சம் விரிவாக செட் செய்திடலாம். எடுத்துக் காட்டாக மவுஸ் கர்சரின் வேகம், துடிப்பு, இப்போது செட்டிங்ஸ் பார் மவுஸ் கீஸ் என்ற கட்டம் கிடைக்கும். இதில் தேவையான மாற்றங்களை மேற்கொண்ட பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது நம்லாக் கீ பேட் மூலம் மவுஸ் கர்சரை நகர்த்தலாம். 1,2,3,4,5,6,7,8,9 ஆகிய கீகள் மவுஸ் கர்சரை பல்வேறு திசைகளில் நகர்த்த உதவும். 5 என்ற கீ மவுஸ் இடது கிளிக் செயல்பாட்டிற்குப் பயன்படும். இன்ஸெர்ட் கீ மவுஸ் கர்சரை அழுத்திப் பிடிப்பதற்கான செயலை மேற்கொள்ளும். + கீ எந்த பொருளின் மீதும் டபுள் கிளிக்கிற்கு உதவிடும். டெலீட் பட்டனை அழுத்தினால் மவுஸ் அதன் இடத்திலிருந்து ரிலீஸ் ஆகும். நம் லாக் பட்டனில் கிளிக் செய்தால் கீ போர்டு மவுஸ் அமைப்பு விலகிடும்

TIPS

நீங்கள் கூகுள் தரும் ஜிமெயில் புரோகிராமினை ஆர்வத்துடன் தொடர்ந்து பயன்படுத்துபவரா?
உங்களுக்கு வரும் ஸ்பேம் மெயில் அல்லது புதிய இமெயிலினை அது எங்கிருந்து வந்தது என்று அறிந்து கொள்ள ஆவலா? அப்படியானால் இதனை நீங்கள் நிச்சயமாய்ப் படிக்க வேண்டும். இந்த விபரத்திற்கான அடிப்படை விபரங்கள் இமெயிலின் ஹெடரில் இருக்கும். முதலில் எந்த மெயில் குறித்துத் தெரிய விரும்புகிறீர்களோ அந்த இமெயில் மெசேஜைத் திறந்து கொள்ளவும். அதன்பின் மேலாக வலது மூலையினைப் பார்க்கவும்.


அங்கு ஒரு அம்புக் குறி இருக்கிறதா? அதில் கிளிக் செய்திடவும். இதில் கீழ் நோக்கி ஒரு மெனு விரியும். இதில் Show Original என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுக்கு பல சொற்கள் குவிந்து பல வகை வரிசையாய் விளங்காத வகையில் எண்களும் சொற்களும் இருக்கும். இதில் உங்களுக்குத் தேவையானது அந்த இமெயில் அனுப்பப்பட்ட ஐ.பி. முகவரிதான். அந்த குழப்பமான வரிசைகளை உற்று நோக்கினால் ஐ.பி. முகவரியினைக் கண்டறியலாம். ஐ.பி .முகவரி தெரிந்து விட்டதா? இது யாரிடமிருந்து எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று இன்னும் விபரமாகத் தெரிய வேண்டுமா? அப்படியானால் http://www.who.is என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அங்கு ஐ.பி. முகவரியினை டைப் செய்ய வேண்டிய இடம் ஒன்று இருக்கும். அதில் இந்த ஐ.பி. முகவரியினை பேஸ்ட் செய்திடவும்; அல்லது டைப் செய்திடவும். உடன் உங்களுக்கு யாரிடமிருந்து இந்த இமெயில் மெசேஜ் வந்தது என்ற விபரம் கிடைக்கும்.

online alarm

உங்கள் கம்ப்யூட்டருடன் உள்ள இன்டர்நெட் இணைப்பு நீக்கப்பட்டுவிட்டாலும் உங்களை எழுப்பும் அலாரம் தருவதுதான் KuKu Klok என்ற ஆன்லைன் அலாரம். இதுhttp://kukuklok.com/ என்ற தளத்தில் கிடைக்கிறது. 


இந்த தளம் சென்றவுடன் அதில் காட்டப்பட்டுள்ள டிஜிட்டல் கடிகாரத்தில் ப்ளஸ் அல்லது மைனஸ் அடையாளத்தில் கிளிக் செய்து நீங்கள் விரும்பும் நேரத்தை செட் செய்திடவும். அலாரத்திற்கான நேரம் செட் செய்யப்பட்டவுடன் உங்களுக்கு எந்த சத்தம் கொண்டு எழுப்ப என்பதனை செட் செய்திட வேண்டும். சேவல் கூவுவது, எலக்ட்ரானிக் கிடார் என நான்கு வகையான ஒலிகள் தரப்பட்டுள்ளன. இவை எப்படி இருக்கும் என சோதித்தும் பார்க்கலாம். இந்த இரண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் Set Alarm என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது அலாரம் ரெடி. உங்கள் இன்டர்நெட் இணைப் பினைத் துண்டித்து விட்டாலும் குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடித்து உங்களை எழுப்பிவிடும். அலாரம் செட் செய்த பின் Set Alarm பட்டன் Cancel பட்டனாக மாறிவிடும். எனவே நேரம் அல்லது அலாரம் ஒலியினை நீங்கள் மாற்ற வேண்டும் என எண்ணினால் மாற்றிவிடலாம். அலாரம் அடிக்கையில் இந்த பட்டன் Stop பட்டனாக மாறிவிடும். அலாரம் அடித்துக் கொண்டிருக்கையில் இதனை அழுத்தினால் அலாரம் அடிப்பது நின்றுவிடும்.

Friday, September 24, 2010

notpad virus-----((( "_ ' )))---------

நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்க போவது நோட்பேடில் போலியான சில வைரஸ் நிரல்களை எழுதி அதை .VBS , .BAT எக்ஸ்டென்ஷ்களாக சேமித்து அதை இயக்குவதன் மூலம் ஒரு சின்ன விளையாட்டு இந்த நிரலால் தங்கள் கணினிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது ஆனால் இந்த நிரல்களை பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கு இதை மின்னஞ்சலில் அனுப்பி விட்டு பாருங்கள் (நீங்கள் சோதித்து பார்த்த பின்பு) அவர் அதை தரவிறக்கி இயக்கினால் அடுத்த பத்து நிமிடத்தில் உங்களுக்கு அலைபேசியில் அழைப்பு வரும் “டேய் நீ அனுப்புனதுல வைரஸ் இருக்குடா கம்ப்யூட்டர் தானே நிறைய பைல் திறக்குது, கலர் கலரா மின்னுதுடா” இப்படியாக உங்களுக்கு கோபத்தில் பேசுவாரென்றே நினைக்கிறேன்.

சரி இனி நீங்கள் ஒரு நோட்பேட் (Start-Run-Type notepad) திறந்து கீழிருக்கும் நிரலை காப்பி செய்து நோட்பேடில் ஒட்டி சேமிக்கும் போது ஏதாவது ஒரு பெயர் கொடுத்து அதை .VBS என்கிற எக்‌ஸ்டென்ஷனில் சேமிக்கவும் இப்படி சேமிக்கும் போது வழக்கமா இருக்கும் ஐகானுக்கு பதிலாக வேறு ஒரு ஐகானாக மாறியிருக்கும் இனி இதை உங்கள் எலியால் இருமுறை கிளிக்கி விட்டு கொஞ்சம் உங்கள் கணினியை வேடிக்கை பாருங்கள் என்ன நடக்கிறதென்று.

Set wshShell = wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "~(enter)"
loop

என்ன ஆச்சரியாமாக இருக்கிறதா இதை உங்களால் நிறுத்துவது என்பது இயலாத காரியம் இதற்கு வழி உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்து விடுவது தான், மீண்டும் ஒரு முறை உங்களுக்கு ஞாபகபடுத்துகிறேன் இதனால் உங்கள் கணினிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

இனி இரண்டாவதாக ஒரு ட்ரிக் பார்ப்போம் இந்த நிரலை காப்பி எடுத்து ஒரு புதிய நோட்பேட்(Start-Run-Type notepad) திறந்து அதில் ஒட்டி சேமிக்கும் போது ஏதாவது ஒரு பெயர் கொடுத்து அதை .VBS என்கிற(ஏதாவது ஒரு பெயர் கொடுத்து ஒரு புள்ளி வைத்து VBS என சேமித்தால் போதும் உதாரணத்துக்கு gsr.vbs) எக்‌ஸ்டென்ஷனில் சேமிக்கவும், இப்போது வழக்கம் போல உங்கள் எலியால் இருமுறை கிளிக்கி பாருங்கள் என்ன நடக்கிறதென்று உங்களலால் கீபோர்டில் ஒன்றும் செய்ய இயலாது மாறாக தானாக ஏதாவது ஒரு பைலை திறக்கும் எந்த இடத்திலாவது கர்சரை கிளிக்கினால் அந்த இடத்தில் You are a fool என்பதாக எழுதும் நீங்கள் வேண்டும்னால் அந்த அடைப்பு குறிக்குள் இருக்கும் You are a fool என்பதற்கு பதிலாக வேறு ஏதாவது எழுதிக்கொள்ளலாம். இதை நிறுத்துவதற்கு உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்து விடுவது தான் வழி.

Set wshShell = wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "You are a fool."
loop 

மூன்றாவதாக ஒரு சின்ன விளையாட்டையும் பார்க்கலாம் கீழிருக்கும் நிரலை காப்பி எடுத்து ஒரு புதிய நோட்பேட்(Start-Run-Type notepad) திறந்து அதில் ஒட்டி சேமிக்கும் போது ஏதாவது .BAT என்கிற எக்ஸ்டென்ஷனில் சேமிக்கவும் இப்போது உங்கள் எலியால் இருமுறை கிளிக்கி வேடிக்கை பாருங்கள் நிச்சியம் ஆச்சரியம் அடைவீர்கள் என்ன உங்கள் கணினி திரை கலர் கலராக மின்னுகிறதா இதை நிறுத்த ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.

@echo off
echo e100 B8 13 00 CD 10 E4 40 88 C3 E4 40 88 C7 F6 E3 30>\z.dbg
echo e110 DF 88 C1 BA C8 03 30 C0 EE BA DA 03 EC A8 08 75>>\z.dbg
echo e120 FB EC A8 08 74 FB BA C9 03 88 D8 EE 88 F8 EE 88>>\z.dbg
echo e130 C8 EE B4 01 CD 16 74 CD B8 03 00 CD 10 C3>>\z.dbg
echo g=100>>\z.dbg
echo q>>\z.dbg
debug <\z.dbg>nul
del \z.dbg

இதையே இன்னும் வேறு சில விதமாக நீங்கள் யோசித்து பயன்படுத்தி பாருங்கள் இது நீங்கள் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே இது போல இன்னும் நிறைய நிரல்கள் இருக்கின்றன. என்ன நண்பர்களே உங்களுக்கு இது வித்யாசமான அனுபவமாக இருக்கிறதா? ஆம் என்றால் நம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள பதிவிற்கு வாக்கும் பதிவை பற்றிய கருத்துரையும் எழுதுவதன் மூலம் நிறைய நண்பர்களை சென்றடைய உதவலாமே.

how to find a email deatail..





மின்னஞ்சல் முகவரி யாருடையது என்பதினை கண்டு பிடிக்க இந்த இனைய தளம் நமக்கு உதவுகிறது.


http://www.emailfinder.com
உரிமையாளரின் அணைத்து தகவல்களும் நமக்கு குடுகின்றது.

மற்றும் பல்வேறு விதமான செயல் பாடுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

google tips........

 தேடுதல் சாதனங்களைத் திறம்படத் தருவதில் தனக்கு நிகர் இல்லை என மீண்டும் கூகுள் நிரூபித்துள்ளது. சென்ற வாரம் கூகுள் இண்ஸ்டண்ட்(Google Instant) என்ற தேடுதலுக்கான முடிவுகள் தரும் புதிய தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாம் தேடும் தகவல் குறித்த தளங்கள், நாம் நம்முடைய தேடுதல் தகவலைத் தரும் முன்னரே காட்டப்பட்டு கிடைக்கின்றன. நம் தேடுதல் நேரம் குறைவதுடன், தேடல் தொடர்பான சரியான தளங்களும் நமக்குக் கிடைக்கின்றன. கூகுள் தளத்தில் இதுவரை, தேடப்படும் பொருள் குறித்த சொற்களை டைப் செய்து என்டர் தட்டிய பின்னரே, கூகுள் தேடத் தொடங்கி நமக்கு, தேடல் தொடர்பான தளங்களைப் பட்டியலிடும். மேலாக, இந்த தேடலுக்கான நேரம் குறிக்கப்படுவதுடன், எத்தனை முடிவுகள் கண்டறியப்பட்டன என்றும் காட்டப்படும். இப்போது இது புதிய முறையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையில் 15 நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது. இதில் மையமாகstreaming search என்னும் செயல்பாடு பயன்படுத்தப்படுகிறது. தேடுதல் இங்கு எப்போதும் ஓடும் ஓடை போல இயங்குகிறது. நாம் தேடுதலுக்கான சொல்லை டைப் செய்திடுகையில், நாம் அந்த தேடல் ஓடையில் இணைகிறோம். அந்த ஓடை முதல் சில எழுத்துக்களிலேயே அதனை உணர்ந்து, நமக்கு முடிவுகளைத் தருகிறது. நாம் தேடல் சொற்களை டைப் செய்யத் தொடங்கும்போதே, கூகுள் தன் தேடலைத் தொடங்கி, ஓரிரு எழுத்துக்கள் அமைக்கப்படும் போதே, என்னவாக இது முடியும் என்று கணித்து, அதற்கான தளங்களைத் தேடல் கட்டத்தின் கீழாகப் பட்டியல் இடுகிறது. பழைய முறையில் நாம் தேடல் சொற்களை முழுமையாக அமைத்த பின்னர் என்டர் தட்டி, தேடச் சொல்லி கட்டளை கொடுப்போம். பின் காட்டப்படும் முடிவுகள் சரியாக உள்ளனவா என்று பார்ப்போம். நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால், மீண்டும் நம் தேடலைச் சரி செய்து மீண்டும் தேடுவோம். புதிய முறையில், நாம் சொல்லை அமைக்கும்போதே முடிவுகள் காட்டப்பட்டு, தொடர்ந்து சொற்களுக்கேற்ப அவை மாற்றப்படுகின்றது. நாம் டைப் செய்திடும் போதே, சம்பந்தப்பட்ட முதன்மைத் தளம் சாம்பல் நிற எழுத்துக்களில் காட்டப்படுகின்றது. அதுதான் நமக்கு வேண்டியது என்றால் அப்போதே நிறுத்தி தளங்களைக் காணலாம்.

இதனால் நாம் முடிக்கும் முன்னரே, நாம் எதிர்பார்த்த தளங்கள் கிடைத்துவிட்டால், தேடல் சொற்கள் தொகுதியை முடிக்காமலேயே நாம் நமக்குத் தேவையான தளங்களைப் பெற்றுச் செல்லலாம்.
ஓர் எடுத்துக் காட்டு மூலம் இதனைக் காணலாம். அமெரிக்க டாலருக்கான எக்சேஞ்ச் விகிதம் என்ன என்று காண்பதற்காக,“Exchange rates dollar to INR” என டைப் செய்திட முடிவெடுத்து, Exஎன டைப் செய்தவுடனேயே, Expedia என்ற தளம் குறித்து காட்டுகிறது. பின்னர் “Exch” என டைப் செய்தவுடன் கூகுள் அது “Exchange rates”என உணர்ந்து அவை சார்பான தன் கால்குலேட்டர் தளம் மற்றும் யுனிவர்சல் கன்வர்டர் தளம் ஒன்றையும் காட்டுகிறது. பின் தொடர்ந்து“Exchange rates d” எனக் கொடுத்தவுடன், கீழுள்ள தளங்கள் மாறுகின்றன. அப்போதே பல்வேறு நாட்டு நாணய மதிப்பிற்கான மதிப்பு மாறுதல் காட்டும் தளங்கள் காட்டப்படுகின்றன. இங்கேயே நாம் இந்திய பணத்திற்கான தளத்திற்குச் செல்லலாம். அல்லது முழுமையாக டைப் செய்தால், இந்திய பணத்திற்கான மாறுதல் காட்டும் தளம் முதல் தளமாகக் கிடைக்கும். இவ்வாறு நாம் டைப் செய்து அடிக்கும் முன்னரோ, அல்லது அடித்து முடித்த அடுத்த நொடியிலேயே, என்டர் தட்டாமலேயே, நாம் தேடும் தளங்கள் காட்டப்படுகின்றன. எனவே நாம் என்ன வேண்டும் என்று கேட்பதற்கு முன்னரே, நாம் தேடுவதை நமக்குக் கூகுள் தருகிறது. சுருக்கமாக இதன் பயன்களைக் கூறுவதென்றால், அதிவேக தேடல் முடிவுகள், மிகப் பயனுள்ள முடிவுகள்,உடனடித் தீர்வு ஆகியவற்றைக் கூறலாம். வழக்கமான தேடல் முறையில், ஒருவர் ஒரு தேடலை டைப் செய்திட குறைந்தது 10 விநாடிகள் எடுத்துக் கொள்வார். இது பலருக்கு 30முதல் 90 விநாடிகள் வரை நீட்டிக்கும். கூகுள் இண்ஸ்டன்ட் பயன்படுத்தினால், ஒரு தேடலுக்கு குறைந்த பட்சம் 2முதல் 5 விநாடிகள் வரை நேரம் குறைகிறது. கூகுளின் அனைத்து வாடிக்கை யாளர்களும், புதிய முறையைப் பயன்படுத்தினால், நாளொன்றுக்கு 350 கோடி விநாடிகள் மிச்சமாகும். அதாவது ஒவ்வொரு விநாடியிலும், 11 மணி நேரம் உலக அளவில் மிச்சப்படுத்தப் படுகிறது.

இதனைத் தேடல் வழிகளில் பெரிய புரட்சி என்று சொல்ல முடியாது என்றாலும், மிகப் பெரிய முன்னேற்றம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டு கூகுள் நிறுவனத்தைப் பாராட்ட வேண்டும். அடுத்து கூகுள் என்ன செய்திடும் என்று எண்ணிப் பார்த்தபோது, தேடல் கட்டத்தில் நாம் சொற்களை டைப் செய்கையில், நம் தேடல் பொருள் இதுவாக இருக்குமோ என சிலவற்றை அந்த கட்டத்தைக் கீழாக விரித்துத் தரலாம். அப்போது நாம் தேடும் முழுமையான சொற்கள் தொகுதி இருப்பின், அதனைத் தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கக் கர்சரை நகர்த்தும்போதே, கூகுள் அதற்கான தளங்களைக் காட்டலாம்.

மைக்ரோசாப்ட் தன் பிங் சர்ச் இன்ஜின் மூலம், கூகுள் நிறுவனத்தின் இடத்தைக் கைப்பற்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கூகுள் இந்த தொழில் நுட்பம் மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, இந்த வகையில் தன் முதல் இடத்தை வேறு யாரும் எடுத்துக் கொள்ள முடியாது என்று நிரூபித்துள்ளது.

கூகுள் தரும் இந்த உடனடித் தேடல், ஏற்கனவே இருந்து வரும் தேடல் தளத்திற்குப் பதிலாக, முதல் கட்டமாக சில நாடுகளுக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வழக்கமான தேடுதல் தளத்தில் இது தரப்படவில்லை. விரைவில் கிடைக்கலாம்.
 அதுவரை http://www.google.com/webhp?sclient=psy என்ற தளத்தில் இதனைப் பெறலாம். எந்த நாட்டினரும் இந்த தளம் சென்று இந்த தேடல் முறையைப் பயன்படுத்தலாம். நீங்களும் இந்த தளம் சென்று பார்த்து, இப்போதைக்கு இதனை ஒரு புக்மார்க்காக அடையாளம் வைத்துத் தேடும் போது இதனைப் பயன்படுத்தலாம்.வழக்கமான SafeSearchஇதிலும் செயல்படுகிறது. பாலியல் மற்றும் வன்முறைத் தளங்களை இதிலும் வடிகட்டிப் பார்க்கலாம்.

இந்த தளத்தைப் பயன்படுத்த குரோம், பயர்பாக்ஸ், சபாரி அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஆகியவற்றில் ஒன்றை பிரவுசராகப் பயன்படுத்த வேண்டும். ஆப்பரா பிரவுசரில் இது செயல்படாது. மேலும் பல தளங்களில் கிடைக்கும் கூகுள் சர்ச் கட்டங்கள் வழியாகவும் இது இப்போதைக்கு இல்லை. மொபைல் போனுக்கான இன்ஸ்டண்ட் தேடல் தளம் இன்னும் தயாராகவில்லை. விரைவில் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு http://www.google.com/instant/ என்ற கூகுளின் தளத்திற்குச் செல்லவும்.

------------------- நன்றி -------------------



ஜிமெயில், "Undo Send" என்ற ஒரு புதிய வசதியை அளிக்கிறது. அதாவது, நீங்கள் தவறுதலாக அனுப்பிய மெயிலை,  மெயில் பெறுபவர் இன்பாக்ஸிக்குச் செல்லாமலேயே தடுத்திடலாம். 


  
மெயில் "Compose" செய்து, மின்னஞ்சலை அனுப்பிய பிறகு, Mail Send Successfully என்ற செய்தி வரும்.  நீங்கள் இந்த வசதியை activate செய்திருந்தால், மின்னஞ்சல், அனுப்பிய பிறகு, "Your Message has been send, Undo" என்ற இணைப்பு வரும்.  மின்னஞ்சல்