Wednesday, November 24, 2010

facebook டவுன்லோட்

இணையத்தில் கூகுளுக்கே போட்டியிடும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனம் தான் இந்த பேஸ்புக் சமூகதளம். இதில் நம்மில் பெரும்பாலானோர் உறுப்பினராக உள்ளனர். இதில் நாம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம். இவைகள் அனைத்தையும் எப்படி டவுன்லோட் செய்வது. இது ஒரு சுலபமான விஷயம் இதற்காக நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இணைக்க வேண்டியதில்லை பேஸ்புக் தளத்திலேயே செய்து விடலாம்.

டவுன்லோட் செய்யப்படும் விவரங்கள்

  • பேஸ்புக்கில் உள்ள நண்பர்களின் பட்டியல்.
  • பேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்த வீடியோக்கள்.
  • பேஸ்புக்கில் உங்களுக்கு வந்துள்ள மொத்த கருத்துக்கள்.
  • பேஸ்புக்கில் வெளியிட்ட உங்கள் பதிவுகளின் அனைத்து விவரங்கள்.
  • நீங்கள் பேஸ்புக்கில் சேர்த்து இருந்த அனைத்து புகைப்படங்கள் (Albums, Profile picture). 
  • நீங்கள் சேர்த்திருந்த நிகழ்வுகள்.
  • உங்களின் சுவர் பகுதி இப்படி அனைத்தையும் ஒரே நேரத்தில் சுலபமாக டவுன்லோட் செய்யலாம். 
டவுன்லோட் செய்யவேண்டிய முறை:
  • முதலில் உங்கள் பேஸ்புக் தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • சென்று உங்கள் கணக்கு(settings) பகுதிக்கு செல்லுங்கள். அதில் கணக்கு அமைப்புகள்(Account Settings) என்பதை க்ளிக் செய்யுங்கள். 
உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால் ஆகிலத்தில் மட்டும் தான் இந்த வசதி காணப்படுகிறது.
அடுத்து வரும் பக்கத்தில் Settings பகுதியில் உள்ள Download Your Information என்ற லிங்கை க்ளிக் செய்யவும்
உங்களுக்கு வரும் விண்டோவில் கீழே உள்ள படங்களில் செய்திருப்பதை போல செய்து கொண்டே முன்னேறி செல்லுங்கள்.
முடிவில் உங்களுக்கு இது போன்ற செய்தி வரும். இது போல வந்தால் உங்களுடைய கோரிக்கை பேஸ்புக் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. அவர்கள் அதை பார்த்து உங்களுக்கு மெயிலில் டவுன்லோட் லிங்க் அனுப்புவார்கள் இதற்கு சுமார் 4 அல்லது 5 மணி நேரங்கள் கூட ஆகலாம் மெயில் வரும் வரை பொறுமை காக்கவும்

மெயில் அழுத்தியவுடன் உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Download now என்ற பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள அனைத்து விவரங்களும் டவுன்லோட் ஆகி விடும். .

 

Sunday, November 21, 2010

செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்கும்செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் இது.அதாவ‌து செல்லை எங்காவது மற‌ந்து வைத்து விட்டு தேடுவது.சிலருக்கு இந்த சோதனை எப்போதாவ‌து ஏற்படும் ,இன்னும் சிலரோ அடிக்கடி இப்படி போனை வைத்த இடம் தெரியாமல் திண்டாடுவார்கள்.
சோபா,மேஜை,கட்டில்,புத்தக அலமாரி,அலுவலக் பை என எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்த பின் கடைசியில் பேப்பருக்கு அடியில் செல்போன் சாதுவாக இருக்கும்.இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்குமே உண்டு.
பொதுவாக இப்படி செல்போனை வைத்த இடம் தெரியாமல் திணறும் போது சுலபமாக செய்யக்கூடியது வேறு ஒருவரின் செல்லில் இருந்து உங்கள் செல்போன் எண்ணுக்கு அழைப்பு விடுப்பது தான்.சிங்ங்கும் செல் ஓசையை கொண்டு போனின் இடத்தை கண்டு[இடித்து விடலாம்.
ஆனால் அருகே யாரும் இல்லாமல் தனியாக மாட்டிகொண்டு விட்டால் இந்த வழியும் கை கொடுக்காது.
இது போன்ற நேரங்களில் உதவுவதற்காக என்றே அமெரிக்காவின் டேவ் டாசன் என்பவர் ஒரு எளிமையான இணையதளத்தை அமைத்திருக்கிறார்.
போனை மறந்து வைத்து தேடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் மின்ன‌ல் வேகத்தில் இந்த தளத்தை உருவாக்கியதாக டாசன் தெரிவித்துள்ளார்.ஐ கான்ட் பைட் மை போன் இது தான் அந்த தளத்தின் பெயர்.
செல் எங்கே என்று தெரியாத போது இந்த தளத்தில் உங்கள் போன் எண்ணை சமர்பித்தால் இந்த தளம் உடனே உங்கள் எண்ணை அழைக்கும்.அப்படியே போனை கண்டுபிடித்து விடலாம்.எளிமையான ஆனால் ப‌யனுள்ள சேவை
அமெரிக்காவை மையமாக கொண்ட சேவை என்றாலும் மற்ற நாடுகளின் குறியீட்டு எண்ணை சமர்பித்து பயன்படுத்தி கொள்ளும் வசதி இருக்கிறது.ஆனால் போன் கட்டண விவரங்கள் பற்றிய தகவல் தெரியவில்லை.
————

Friday, November 12, 2010

கணினியிலுள்ள தகவல்களை அழிக்கும் வைரஸ்கள்

Virus) வைரஸ்கள் பல வகைகளாக உபயோகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் இதன் பொதுவான குணமானது ஒரு கணினியில் உள்ள EXE எனப்படும் விரிவு கொண்ட புரோகிராம்களுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொள்ளும் திறன் கொண்டது.
 இது போன்று சேர்ந்து கொண்ட வைரஸ் புரோகிராமானது அந்த EXE விரிவு கொண்ட புரோகிராமை உபயோகப்படுத்தும் போது நாம் எதிர்பாரா வகையில் அந்த புரோகிராமை இயக்க முடியாத வகையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சில வைரஸ்கள் நமது புரோகிராம்களில் உள்ள சில கரக்டர்களை வேறு சில கரக்டர்களாக மாற்றியோ அல்லது நமது புரோகிராம் வ?களை காணாமல் செய்தோ பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுவரை பல்லாயிரக்கணக்கான வைரஸ்கள் உலகில் உபயோகத்தில் இருந்து வந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த I Love You எனப்படும் வைரஸ் கணினியில் ஏற்படுத்திய பாதிப்பை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.
2. டிராஜன் ஹோர்ஸ் (Trojan Horse) இது ஒரு புது வகையான வைரஸ் ஆக கருதப்பட்டாலும் இதன் பாதிப்புகள் நாம் எதிர்பாராத வகையில் இருக்கும். ஏனென்றால் இந்த வகை வைரசானது ஒரு கணினி புரோகிராமுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொண்டாலும் பல நேரங்களில் எதிர்பார்க் காத சில வேலைகளைச் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு யூசர் தனது புரோகிராமை எடுத்து அதில் சிலமாற்றங்களைச் செய்ய முற்படும்போது அந்தப் புரோகிராமை அழித்து விடும் தன்மை கொண்டது தான் இந்த டிராஜன் ஹோர்ஸ் ஆகும். இது போன்று புரோகிராம்களை அழித்து விடுவதால் யூசர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போகும் நிலை உருவாகிறது.
3. வோம் (Worm) இந்த வகை வைரஸ் ஆனது சற்று வேடிக்கையானதும் கூட. ஏனென்றால் ஒரு புரோகிராமை நாம் கொப்பி செய்யும் போது அதே போன்று அதே பெயரில் மற்றொரு புரோகிராம் ஒன்றும் உருவாகும். இந்த இரண்டு புரோகிராம்களின் அளவும் ஒரே அளவாகவே காட்டும். ஆகையால் நாம் ஏதாவது ஒன்றை அழிக்க நினைத்து புரோகிராமை அழித்து விடுவோம். அதன் பிறகு நம்மிடம் இருக்கும் அந்த மற்றொரு புரோ கிராமை எடுத்து அதில் உள்ள தகவல்களை பார்த்தோமேயானால் ஒன்றுமே இருக்காது. ஒரு புரோகிராம் வரி கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக ஓர் அலுவலகத்தில் கணினியை உபயோகிக்கும் ஒருவர் ஒவ்வொரு முறையும் தனது கணினியில் இருந்து Server கணினிக்கு தகவல்களை அனுப்பும் போதும் இது போன்ற வைரஸ்கள் உள்ளதா என்று சோதனையிட வேண்டும்.
அது போன்று சோதனையிடும் போது இது போன்ற அபாயகரமான வைரஸ் புரோகிராம்களை அழித்து விட்டு பிறகு தான் அவற்றைக் கணினியில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்

அடுத்தவருட ஆரம்பத்தில் அப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone

அடுத்த வருட ஆரம்பத்தில் அப்பிள் நிறுவனம் Verizon வலையமைப்பில் பயன்படுத்தவல்ல தனது புதிய iPhone 4 ஐ 
வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கூகிள் நிறுவனத்தின் அன்ட்ரியோட் கைப்பேசிகள் அமெரிக்காவின் கைப்பேசிச் சந்தையை ஆக்கிரமித்துவரும் இவ்வேளையில், அப்பிள் நிறுவனத்தின் அப் புதிய iPhone 4 கைப்பேசி, மீண்டும் கைப்பேசிச் சந்தையை அப்பிள் நிறுவனத்திற்குச் சாதகமாக மாற்றும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
Verizon வலையமைப்பில் தொழிற்படத்தக்கவாறு ஐபோன் பயன்பாட்டிற்கு வரும்பொழுது பெருமளவான அன்ட்ரியோட் பாவனையாளர்கள் ஐபோனைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்று கருத்துக்கணிப்புக்கள் தொரிவிக்கின்றன.

Friday, November 5, 2010

நாம் பொதுவாக மீடியா பிளேயர் என்றால் பாட்டு கேட்பது, படம் பார்ப்பது போன்ற செயல்களை மட்டுமே செய்யும் என்று இருப்போம்

நாம் பொதுவாக மீடியா பிளேயர் என்றால் பாட்டு கேட்பது, படம் பார்ப்பது போன்ற செயல்களை மட்டுமே செய்யும் என்று இருப்போம். ஆனால் இந்த விண்டோஸ் மீடியா பிளேயரினை பயன்படுத்தி CD/DVD-க்களை ரைட் செய்ய முடியும். இதுவரை நாம் CD/DVD-க்களை ரைட் செய்ய நீரோ போன்ற எதாவதொரு எழுதியை பயன்படுத்தியே CD/DVD-க்களை ரைட் செய்வோம். அப்படி இல்லாமல் விண்டோஸ் மீடியா பிளேயரினை பயன்படுத்தியே ரைட் செய்ய முடியும். முதலில் விண்டோஸ் மீடியா பிளேயரை ஒப்பன் செய்து கொள்ளவும். பின் வலதுபுறமாக உள்ள BURN என்னும் பட்டியை தேர்வு செய்யவும்.  OPTION பட்டனை தேர்வு செய்து Data CD/DVD Audiao Cd போன்ற தேர்வுகளை தேர்வு செய்து கொள்ள முடியும்.
பின் உங்கள் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு பின் எந்த டேட்டாவினை ரைட் செய்ய வேண்டுமோ அதனை Drag and Drop செய்ய வேண்டும்.
பின் Start Burn என்ற பட்டனை அழுத்தவும். பிறகு Cd- யில் டேட்டாவானது பதியப்படும்.
அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 

கணினி

கணினியின் பாகங்கள் பெரும்பாலும் டிஜிட்டல் சர்க்யூட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.இவைகள் இயங்கக் கடிகாரத் துடிப்பு மிக அவசியம் ஆகும்.ஒரு விநாடியில் எத்தனை கடிகாரத் துடிப்புகளில் வேலை செய்கிறது என்பதைப் பொறுத்து வேகம் அதன் வேகம் கணக்கிடப்படுகிறது.
(எ.கா):நமது உடலின் இதயதுடிப்பைச் சொல்லலாம்.ஒவ்வொரு இதயத்துடிப்பின் போதும் இரத்த ஓட்டம் உடலில் பல பகுதிக்குச் செல்கிறது. அதுமட்டுமல்லாமல் பல செல்கள் புதியதாக உருவாகிறது,பல செல்கள் இறக்கிறது.நமது இதயதுடிப்பின் வேகம் சராசரி வேகத்தை விட குறைந்தாலும் கூடினாலும் ஆபத்து.நமது இதயதுடிப்பு வேகம் நிமிடத்திற்கு இத்தனை துடிப்பு என்று அளக்கப்படுகிறது.அதேபோல் கணினியில் வினாடிக்கு இத்தனை கடிகாரத் துடிப்பு என்று அளக்கப்படுகிறது.இந்த கடிகாரத் துடிப்பை ஏற்படுத்துவது கிரிஸ்டல் ஆசிலேட்டர் எனப்படும் ஒரு சிறிய பொருள்.
இந்தக் கடிகார துடிப்பில் இரண்டு பகுதி உண்டு.ஹை(High) அல்லது 1 மற்றது லோ(Low) அல்லது0.
ஒரு ஹை பகுதியும் ஒரு லோ பகுதியும் சேர்ந்தது ஒரு சுழற்சி(Cycle) ஆகும்.இந்த ஒரு சுழற்சியை முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை "சுழற்சி நேரம்"(Cycle time) என்பர்.ஒரு வினாடிக்கு எத்தனை சுழற்சிகள் நடைபெறுகிறதோ அதைத்தான் "சுழற்சி வேகம்" என்பர்.இந்த வேகம் "ஹெர்ட்ஸ்"(hertz) என்ற அலகால் அளக்கப்படுகிறது.(எ.கா) ஒரு வினாடிக்கு ஐந்து சுழற்சிகள் நடைபெற்றால் அதன் வேகம் 5Hz ஆகும்.
1Hz=வினாடிக்கு ஒரு சுழற்சி.
1000 Hz = 1 கிலோ ஹெர்ஸ் (KHz)
1000 KHz = 1மெகா ஹெர்ஸ் (MHz)
1000 MHz = 1 ஜிகா ஹெர்ஸ் (GHz)
1000 GHz = 1 டெரா ஹெர்ஸ் (THz)
ஒரு நுண்செயலி 100 மெகா ஹெர்ஸ் வேகத்தில் செயல்படுகிறதென்றால் அது ஒரு கோடி சுழற்சிகளை ஒரு வினாடியில் முடிக்கிறது என்று அர்த்தம்.ஒரு கோடி சுழ்ற்சிக்கு ஒரு விநாடி என்றால் ஒரு சுழற்சியை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?..மிக..மிக...மிக குறைந்த நேரமே ஆகும்.இதை வினாடியில் கூற வேண்டுமெனில் கீழ் கண்டவாறு கூறலாம்.
மைக்ரோ விநாடி = 1/100,000 விநாடி (விநாடியில் பத்துலட்சத்தில் ஒரு பகுதி)
நேனோ விநாடி=1/100,00,000 விநாடி
பிகோ விநாடி = 1/100,00,00,000 விநாடி
ஃபெம்டோ விநாடி= 1/100,00,00,00,00,000 விநாடி

Saturday, October 16, 2010

கொசுக்களை அழிக்க அல்லது விரட்ட தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம்.பலர் டென்னிஸ் மட்டை போன்ற ஒன்றை வைத்து கொசுக்களை அடிப்பதை பார்த்து இருக்கிறோம்.நாம் கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இயக்கினால் கீழ்க்கண்ட விண்டோ தோன்றும் அதில் Active என்பதை கிளிக் செய்தால் இந்த மென்பொருள இயங்க ஆரம்பித்து விடும்.

Active என்பதை கிளிக் செய்தவுடன் இந்த மென்பொருள் கொசுவை விரட்டும் அல்ட்ரா ஒலிகளைவெளிபடுத்த ஆரம்பித்து விடும்.இந்த அல்ட்ரா ஒலிகளை நாம் கேட்க முடியாது.
இந்த மென்பொருளில் இருந்து வரும் அல்ட்ரா ஒலி கொசுக்களை பறக்க விடாமல் கட்டுபடுத்துகிறது.இதனால் இதை இயக்கிய சில நிமிடங்களில் உங்கள் கணிணிக்கு அருகில் இருந்து கொசுக்கள் ஓடிவிடும்.நீங்கள்மீண்டும் INACTIVE கிளிக் செய்து இந்த மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தலாம்
CNET தளத்தில் இருந்து தரவிறக்க:http://download.cnet.com