Powered By Blogger

Wednesday, November 24, 2010

facebook டவுன்லோட்

இணையத்தில் கூகுளுக்கே போட்டியிடும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனம் தான் இந்த பேஸ்புக் சமூகதளம். இதில் நம்மில் பெரும்பாலானோர் உறுப்பினராக உள்ளனர். இதில் நாம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம். இவைகள் அனைத்தையும் எப்படி டவுன்லோட் செய்வது. இது ஒரு சுலபமான விஷயம் இதற்காக நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இணைக்க வேண்டியதில்லை பேஸ்புக் தளத்திலேயே செய்து விடலாம்.

டவுன்லோட் செய்யப்படும் விவரங்கள்

  • பேஸ்புக்கில் உள்ள நண்பர்களின் பட்டியல்.
  • பேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்த வீடியோக்கள்.
  • பேஸ்புக்கில் உங்களுக்கு வந்துள்ள மொத்த கருத்துக்கள்.
  • பேஸ்புக்கில் வெளியிட்ட உங்கள் பதிவுகளின் அனைத்து விவரங்கள்.
  • நீங்கள் பேஸ்புக்கில் சேர்த்து இருந்த அனைத்து புகைப்படங்கள் (Albums, Profile picture). 
  • நீங்கள் சேர்த்திருந்த நிகழ்வுகள்.
  • உங்களின் சுவர் பகுதி இப்படி அனைத்தையும் ஒரே நேரத்தில் சுலபமாக டவுன்லோட் செய்யலாம். 
டவுன்லோட் செய்யவேண்டிய முறை:
  • முதலில் உங்கள் பேஸ்புக் தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • சென்று உங்கள் கணக்கு(settings) பகுதிக்கு செல்லுங்கள். அதில் கணக்கு அமைப்புகள்(Account Settings) என்பதை க்ளிக் செய்யுங்கள். 
உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால் ஆகிலத்தில் மட்டும் தான் இந்த வசதி காணப்படுகிறது.
அடுத்து வரும் பக்கத்தில் Settings பகுதியில் உள்ள Download Your Information என்ற லிங்கை க்ளிக் செய்யவும்
உங்களுக்கு வரும் விண்டோவில் கீழே உள்ள படங்களில் செய்திருப்பதை போல செய்து கொண்டே முன்னேறி செல்லுங்கள்.
முடிவில் உங்களுக்கு இது போன்ற செய்தி வரும். இது போல வந்தால் உங்களுடைய கோரிக்கை பேஸ்புக் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. அவர்கள் அதை பார்த்து உங்களுக்கு மெயிலில் டவுன்லோட் லிங்க் அனுப்புவார்கள் இதற்கு சுமார் 4 அல்லது 5 மணி நேரங்கள் கூட ஆகலாம் மெயில் வரும் வரை பொறுமை காக்கவும்

மெயில் அழுத்தியவுடன் உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Download now என்ற பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள அனைத்து விவரங்களும் டவுன்லோட் ஆகி விடும். .

 

No comments:

Post a Comment