Powered By Blogger

Wednesday, November 24, 2010

facebook டவுன்லோட்

இணையத்தில் கூகுளுக்கே போட்டியிடும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனம் தான் இந்த பேஸ்புக் சமூகதளம். இதில் நம்மில் பெரும்பாலானோர் உறுப்பினராக உள்ளனர். இதில் நாம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம். இவைகள் அனைத்தையும் எப்படி டவுன்லோட் செய்வது. இது ஒரு சுலபமான விஷயம் இதற்காக நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இணைக்க வேண்டியதில்லை பேஸ்புக் தளத்திலேயே செய்து விடலாம்.

டவுன்லோட் செய்யப்படும் விவரங்கள்

  • பேஸ்புக்கில் உள்ள நண்பர்களின் பட்டியல்.
  • பேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்த வீடியோக்கள்.
  • பேஸ்புக்கில் உங்களுக்கு வந்துள்ள மொத்த கருத்துக்கள்.
  • பேஸ்புக்கில் வெளியிட்ட உங்கள் பதிவுகளின் அனைத்து விவரங்கள்.
  • நீங்கள் பேஸ்புக்கில் சேர்த்து இருந்த அனைத்து புகைப்படங்கள் (Albums, Profile picture). 
  • நீங்கள் சேர்த்திருந்த நிகழ்வுகள்.
  • உங்களின் சுவர் பகுதி இப்படி அனைத்தையும் ஒரே நேரத்தில் சுலபமாக டவுன்லோட் செய்யலாம். 
டவுன்லோட் செய்யவேண்டிய முறை:
  • முதலில் உங்கள் பேஸ்புக் தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • சென்று உங்கள் கணக்கு(settings) பகுதிக்கு செல்லுங்கள். அதில் கணக்கு அமைப்புகள்(Account Settings) என்பதை க்ளிக் செய்யுங்கள். 
உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால் ஆகிலத்தில் மட்டும் தான் இந்த வசதி காணப்படுகிறது.
அடுத்து வரும் பக்கத்தில் Settings பகுதியில் உள்ள Download Your Information என்ற லிங்கை க்ளிக் செய்யவும்
உங்களுக்கு வரும் விண்டோவில் கீழே உள்ள படங்களில் செய்திருப்பதை போல செய்து கொண்டே முன்னேறி செல்லுங்கள்.
முடிவில் உங்களுக்கு இது போன்ற செய்தி வரும். இது போல வந்தால் உங்களுடைய கோரிக்கை பேஸ்புக் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. அவர்கள் அதை பார்த்து உங்களுக்கு மெயிலில் டவுன்லோட் லிங்க் அனுப்புவார்கள் இதற்கு சுமார் 4 அல்லது 5 மணி நேரங்கள் கூட ஆகலாம் மெயில் வரும் வரை பொறுமை காக்கவும்

மெயில் அழுத்தியவுடன் உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Download now என்ற பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள அனைத்து விவரங்களும் டவுன்லோட் ஆகி விடும். .

 

Sunday, November 21, 2010

செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்கும்



செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் இது.அதாவ‌து செல்லை எங்காவது மற‌ந்து வைத்து விட்டு தேடுவது.சிலருக்கு இந்த சோதனை எப்போதாவ‌து ஏற்படும் ,இன்னும் சிலரோ அடிக்கடி இப்படி போனை வைத்த இடம் தெரியாமல் திண்டாடுவார்கள்.
சோபா,மேஜை,கட்டில்,புத்தக அலமாரி,அலுவலக் பை என எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்த பின் கடைசியில் பேப்பருக்கு அடியில் செல்போன் சாதுவாக இருக்கும்.இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்குமே உண்டு.
பொதுவாக இப்படி செல்போனை வைத்த இடம் தெரியாமல் திணறும் போது சுலபமாக செய்யக்கூடியது வேறு ஒருவரின் செல்லில் இருந்து உங்கள் செல்போன் எண்ணுக்கு அழைப்பு விடுப்பது தான்.சிங்ங்கும் செல் ஓசையை கொண்டு போனின் இடத்தை கண்டு[இடித்து விடலாம்.
ஆனால் அருகே யாரும் இல்லாமல் தனியாக மாட்டிகொண்டு விட்டால் இந்த வழியும் கை கொடுக்காது.
இது போன்ற நேரங்களில் உதவுவதற்காக என்றே அமெரிக்காவின் டேவ் டாசன் என்பவர் ஒரு எளிமையான இணையதளத்தை அமைத்திருக்கிறார்.
போனை மறந்து வைத்து தேடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் மின்ன‌ல் வேகத்தில் இந்த தளத்தை உருவாக்கியதாக டாசன் தெரிவித்துள்ளார்.ஐ கான்ட் பைட் மை போன் இது தான் அந்த தளத்தின் பெயர்.
செல் எங்கே என்று தெரியாத போது இந்த தளத்தில் உங்கள் போன் எண்ணை சமர்பித்தால் இந்த தளம் உடனே உங்கள் எண்ணை அழைக்கும்.அப்படியே போனை கண்டுபிடித்து விடலாம்.எளிமையான ஆனால் ப‌யனுள்ள சேவை
அமெரிக்காவை மையமாக கொண்ட சேவை என்றாலும் மற்ற நாடுகளின் குறியீட்டு எண்ணை சமர்பித்து பயன்படுத்தி கொள்ளும் வசதி இருக்கிறது.ஆனால் போன் கட்டண விவரங்கள் பற்றிய தகவல் தெரியவில்லை.
————

Friday, November 12, 2010

கணினியிலுள்ள தகவல்களை அழிக்கும் வைரஸ்கள்

Virus) வைரஸ்கள் பல வகைகளாக உபயோகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் இதன் பொதுவான குணமானது ஒரு கணினியில் உள்ள EXE எனப்படும் விரிவு கொண்ட புரோகிராம்களுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொள்ளும் திறன் கொண்டது.
 இது போன்று சேர்ந்து கொண்ட வைரஸ் புரோகிராமானது அந்த EXE விரிவு கொண்ட புரோகிராமை உபயோகப்படுத்தும் போது நாம் எதிர்பாரா வகையில் அந்த புரோகிராமை இயக்க முடியாத வகையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சில வைரஸ்கள் நமது புரோகிராம்களில் உள்ள சில கரக்டர்களை வேறு சில கரக்டர்களாக மாற்றியோ அல்லது நமது புரோகிராம் வ?களை காணாமல் செய்தோ பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுவரை பல்லாயிரக்கணக்கான வைரஸ்கள் உலகில் உபயோகத்தில் இருந்து வந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த I Love You எனப்படும் வைரஸ் கணினியில் ஏற்படுத்திய பாதிப்பை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.
2. டிராஜன் ஹோர்ஸ் (Trojan Horse) இது ஒரு புது வகையான வைரஸ் ஆக கருதப்பட்டாலும் இதன் பாதிப்புகள் நாம் எதிர்பாராத வகையில் இருக்கும். ஏனென்றால் இந்த வகை வைரசானது ஒரு கணினி புரோகிராமுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொண்டாலும் பல நேரங்களில் எதிர்பார்க் காத சில வேலைகளைச் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு யூசர் தனது புரோகிராமை எடுத்து அதில் சிலமாற்றங்களைச் செய்ய முற்படும்போது அந்தப் புரோகிராமை அழித்து விடும் தன்மை கொண்டது தான் இந்த டிராஜன் ஹோர்ஸ் ஆகும். இது போன்று புரோகிராம்களை அழித்து விடுவதால் யூசர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போகும் நிலை உருவாகிறது.
3. வோம் (Worm) இந்த வகை வைரஸ் ஆனது சற்று வேடிக்கையானதும் கூட. ஏனென்றால் ஒரு புரோகிராமை நாம் கொப்பி செய்யும் போது அதே போன்று அதே பெயரில் மற்றொரு புரோகிராம் ஒன்றும் உருவாகும். இந்த இரண்டு புரோகிராம்களின் அளவும் ஒரே அளவாகவே காட்டும். ஆகையால் நாம் ஏதாவது ஒன்றை அழிக்க நினைத்து புரோகிராமை அழித்து விடுவோம். அதன் பிறகு நம்மிடம் இருக்கும் அந்த மற்றொரு புரோ கிராமை எடுத்து அதில் உள்ள தகவல்களை பார்த்தோமேயானால் ஒன்றுமே இருக்காது. ஒரு புரோகிராம் வரி கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக ஓர் அலுவலகத்தில் கணினியை உபயோகிக்கும் ஒருவர் ஒவ்வொரு முறையும் தனது கணினியில் இருந்து Server கணினிக்கு தகவல்களை அனுப்பும் போதும் இது போன்ற வைரஸ்கள் உள்ளதா என்று சோதனையிட வேண்டும்.
அது போன்று சோதனையிடும் போது இது போன்ற அபாயகரமான வைரஸ் புரோகிராம்களை அழித்து விட்டு பிறகு தான் அவற்றைக் கணினியில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்

அடுத்தவருட ஆரம்பத்தில் அப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone

அடுத்த வருட ஆரம்பத்தில் அப்பிள் நிறுவனம் Verizon வலையமைப்பில் பயன்படுத்தவல்ல தனது புதிய iPhone 4 ஐ 
வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கூகிள் நிறுவனத்தின் அன்ட்ரியோட் கைப்பேசிகள் அமெரிக்காவின் கைப்பேசிச் சந்தையை ஆக்கிரமித்துவரும் இவ்வேளையில், அப்பிள் நிறுவனத்தின் அப் புதிய iPhone 4 கைப்பேசி, மீண்டும் கைப்பேசிச் சந்தையை அப்பிள் நிறுவனத்திற்குச் சாதகமாக மாற்றும் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
Verizon வலையமைப்பில் தொழிற்படத்தக்கவாறு ஐபோன் பயன்பாட்டிற்கு வரும்பொழுது பெருமளவான அன்ட்ரியோட் பாவனையாளர்கள் ஐபோனைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்று கருத்துக்கணிப்புக்கள் தொரிவிக்கின்றன.

Friday, November 5, 2010

நாம் பொதுவாக மீடியா பிளேயர் என்றால் பாட்டு கேட்பது, படம் பார்ப்பது போன்ற செயல்களை மட்டுமே செய்யும் என்று இருப்போம்

நாம் பொதுவாக மீடியா பிளேயர் என்றால் பாட்டு கேட்பது, படம் பார்ப்பது போன்ற செயல்களை மட்டுமே செய்யும் என்று இருப்போம். ஆனால் இந்த விண்டோஸ் மீடியா பிளேயரினை பயன்படுத்தி CD/DVD-க்களை ரைட் செய்ய முடியும். இதுவரை நாம் CD/DVD-க்களை ரைட் செய்ய நீரோ போன்ற எதாவதொரு எழுதியை பயன்படுத்தியே CD/DVD-க்களை ரைட் செய்வோம். அப்படி இல்லாமல் விண்டோஸ் மீடியா பிளேயரினை பயன்படுத்தியே ரைட் செய்ய முடியும். முதலில் விண்டோஸ் மீடியா பிளேயரை ஒப்பன் செய்து கொள்ளவும். பின் வலதுபுறமாக உள்ள BURN என்னும் பட்டியை தேர்வு செய்யவும்.  OPTION பட்டனை தேர்வு செய்து Data CD/DVD Audiao Cd போன்ற தேர்வுகளை தேர்வு செய்து கொள்ள முடியும்.
பின் உங்கள் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு பின் எந்த டேட்டாவினை ரைட் செய்ய வேண்டுமோ அதனை Drag and Drop செய்ய வேண்டும்.
பின் Start Burn என்ற பட்டனை அழுத்தவும். பிறகு Cd- யில் டேட்டாவானது பதியப்படும்.
அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 

கணினி

கணினியின் பாகங்கள் பெரும்பாலும் டிஜிட்டல் சர்க்யூட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.இவைகள் இயங்கக் கடிகாரத் துடிப்பு மிக அவசியம் ஆகும்.ஒரு விநாடியில் எத்தனை கடிகாரத் துடிப்புகளில் வேலை செய்கிறது என்பதைப் பொறுத்து வேகம் அதன் வேகம் கணக்கிடப்படுகிறது.
(எ.கா):நமது உடலின் இதயதுடிப்பைச் சொல்லலாம்.ஒவ்வொரு இதயத்துடிப்பின் போதும் இரத்த ஓட்டம் உடலில் பல பகுதிக்குச் செல்கிறது. அதுமட்டுமல்லாமல் பல செல்கள் புதியதாக உருவாகிறது,பல செல்கள் இறக்கிறது.நமது இதயதுடிப்பின் வேகம் சராசரி வேகத்தை விட குறைந்தாலும் கூடினாலும் ஆபத்து.நமது இதயதுடிப்பு வேகம் நிமிடத்திற்கு இத்தனை துடிப்பு என்று அளக்கப்படுகிறது.அதேபோல் கணினியில் வினாடிக்கு இத்தனை கடிகாரத் துடிப்பு என்று அளக்கப்படுகிறது.இந்த கடிகாரத் துடிப்பை ஏற்படுத்துவது கிரிஸ்டல் ஆசிலேட்டர் எனப்படும் ஒரு சிறிய பொருள்.
இந்தக் கடிகார துடிப்பில் இரண்டு பகுதி உண்டு.ஹை(High) அல்லது 1 மற்றது லோ(Low) அல்லது0.
ஒரு ஹை பகுதியும் ஒரு லோ பகுதியும் சேர்ந்தது ஒரு சுழற்சி(Cycle) ஆகும்.இந்த ஒரு சுழற்சியை முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை "சுழற்சி நேரம்"(Cycle time) என்பர்.ஒரு வினாடிக்கு எத்தனை சுழற்சிகள் நடைபெறுகிறதோ அதைத்தான் "சுழற்சி வேகம்" என்பர்.இந்த வேகம் "ஹெர்ட்ஸ்"(hertz) என்ற அலகால் அளக்கப்படுகிறது.(எ.கா) ஒரு வினாடிக்கு ஐந்து சுழற்சிகள் நடைபெற்றால் அதன் வேகம் 5Hz ஆகும்.
1Hz=வினாடிக்கு ஒரு சுழற்சி.
1000 Hz = 1 கிலோ ஹெர்ஸ் (KHz)
1000 KHz = 1மெகா ஹெர்ஸ் (MHz)
1000 MHz = 1 ஜிகா ஹெர்ஸ் (GHz)
1000 GHz = 1 டெரா ஹெர்ஸ் (THz)
ஒரு நுண்செயலி 100 மெகா ஹெர்ஸ் வேகத்தில் செயல்படுகிறதென்றால் அது ஒரு கோடி சுழற்சிகளை ஒரு வினாடியில் முடிக்கிறது என்று அர்த்தம்.ஒரு கோடி சுழ்ற்சிக்கு ஒரு விநாடி என்றால் ஒரு சுழற்சியை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?..மிக..மிக...மிக குறைந்த நேரமே ஆகும்.இதை வினாடியில் கூற வேண்டுமெனில் கீழ் கண்டவாறு கூறலாம்.
மைக்ரோ விநாடி = 1/100,000 விநாடி (விநாடியில் பத்துலட்சத்தில் ஒரு பகுதி)
நேனோ விநாடி=1/100,00,000 விநாடி
பிகோ விநாடி = 1/100,00,00,000 விநாடி
ஃபெம்டோ விநாடி= 1/100,00,00,00,00,000 விநாடி

Saturday, October 16, 2010

கொசுக்களை அழிக்க அல்லது விரட்ட தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம்.பலர் டென்னிஸ் மட்டை போன்ற ஒன்றை வைத்து கொசுக்களை அடிப்பதை பார்த்து இருக்கிறோம்.நாம் கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இயக்கினால் கீழ்க்கண்ட விண்டோ தோன்றும் அதில் Active என்பதை கிளிக் செய்தால் இந்த மென்பொருள இயங்க ஆரம்பித்து விடும்.

Active என்பதை கிளிக் செய்தவுடன் இந்த மென்பொருள் கொசுவை விரட்டும் அல்ட்ரா ஒலிகளைவெளிபடுத்த ஆரம்பித்து விடும்.இந்த அல்ட்ரா ஒலிகளை நாம் கேட்க முடியாது.
இந்த மென்பொருளில் இருந்து வரும் அல்ட்ரா ஒலி கொசுக்களை பறக்க விடாமல் கட்டுபடுத்துகிறது.இதனால் இதை இயக்கிய சில நிமிடங்களில் உங்கள் கணிணிக்கு அருகில் இருந்து கொசுக்கள் ஓடிவிடும்.நீங்கள்மீண்டும் INACTIVE கிளிக் செய்து இந்த மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தலாம்
CNET தளத்தில் இருந்து தரவிறக்க:http://download.cnet.com

Thursday, September 30, 2010

நாம் பேசும் பொருள் பற்றி அறிஞர்கள் கூறியது என்ன என்று எப்படி அறிந்து கொள்வது?

ஒரு மனிதனை மூன்று விஷயங்கள் காட்டிக் கொடுக்கும். அவனுடைய கண்கள், நண்பர்கள் மற்றும் அவன் மேற்கோள் காட்டும் சங்கதிகள். நம் கருத்துக்கு வலு சேர்க்க, ஸ்டைலாகப் பேச, விஷயங்களைப் புதிய முறையில் சொல்ல முன்னாள் அறிஞர்கள் கூறிய கூற்றுக்களை நாம் கூறுகிறோம். ஆங்கிலத்தில் கொட்டேஷன் என்று கூறும் இவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால் நம் பேச்சுக்கு மதிப்பிருக்கும்.


நாம் பேசும் பொருள் பற்றி அறிஞர்கள் கூறியது என்ன என்று எப்படி அறிந்து கொள்வது? இதற்கென ஒரு தளhttp://www.quotesdaddy.com/ என்ற முகவரியில் உள்ளது. ஒவ்வொரு பொருள் குறித்தும் இதில் மேற்கோள்களைப் பெறலாம். அல்லது ஒரு அறிஞர் சொன்னது என்ன என்று தேடித் தரச் சொன்னால் இந்த தளம் அவற்றைத் தருகிறது. நட்பு பற்றி, வாழ்க்கை பற்றி என அன்றாடம் சில கொட்டேஷன்கள் கிடைக்கின்றன. நாம் தேடும் சில குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான கொட்டேஷன்களும் தரப்படுகின்றன.

பிறந்த நாள், குழந்தை பிறந்ததை வாழ்த்த, மரண ஊர்வலம், பணி ஓய்வு பெறுதல், திருமணம், ஆண்டு விழா என எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்ற மேற்கோள்களை இதில் பெற்று பயன்படுத்தலம். இந்த தளத்தில் பதிந்து கொண்டால் உங்களுக்கு மேற்கோள்கள் இலவசமாக அனுப்பப்படும். உங்களின் பேச்சினையும் மற்றவர்கள் ஆர்வத்துடன் கேட்க சில கொட்டேஷன்களைப் பயன்படுத்துங்கள். அந்த அளவில் இந்த தளம் ஒரு பயனுள்ள தளமாகும்.

Internet tips









இன்டர்நெட் பிரவுசரில் .com என்று முடியும் தளங்களுக்கு அதன் பெயரை மட்டும் டைப் செய்து கண்ட்ரோல் + என்டர் தட்டினால் போதும. அதுபோல் “www” and “.net” என அமைய ஷிப்ட் + என்டர் தட்டவும். அடுத்து “www” and “.org” என அமைய கண்ட்ரோல்+ஷிப்ட்+என்டர் தட்டவும்
சில பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் பல முன்னெழுத்துக்களை போட்டுக் கொள்வார்கள். தந்தை, பாட்டனார், முப்பாட்டனார், கொள்ளுத் தாத்தா என பின்னோக்கிய காலத்தில் முன்னோக்கி செல்வார்கள். இப்படியே எத்தனை தலைமுறையை நாம் அறிந்து கொள்ள முடியும். யாராவது அதிக வயதில் வாழும் தாத்தாவை பேச வைத்து அறிந்து கொண்டால் தான் முடியும்.

அவர் கூறுவதையும் எழுதி வைத்தால் தானே நாம் நம் சந்ததிக்குக் கொடுக்க முடியும். இதனால் பெரிய பயன் இல்லை என்றாலும் நான் இந்தக் குடும்ப மரத்தைச் சேர்ந்தவன். அதன் ஒரு கிளையிலிருந்து வந்தவன் தான்நீ என்று இன்னொருவருடன் உறவு கொள்ள முடியும். இந்த குடும்ப மரத்தின் கிளைகளை எழுதி வைத்திட ஒரு இணைய தளம் உதவுகிறது. http://www.tribalpages.com என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இங்கு உங்கள் குடும்ப மரத்தை உருவாக்கலாம். அதில் போட்டோக் களை பதிக்கலாம்.

குடும்பத்திற்கென ஒரு இணைய தளத்தை உருவாக்கி அதனை இந்த தளம் தரும் இலவச சர்வரில் போட்டு வைக்கலாம். மற்றவர்கள் அமைத்துள்ள குடும்ப பாரம்பரியத்தைப் பார்த்து நாமும் அவ்வாறு அமைக்கலாம். இவ்வாறு அமைக்கப்பட்ட குடும்ப பரம்பரையின் உறுப்பினர்களை சர்ச் இஞ்சின் மூலம் தேடி அறியலாம். இந்த இணைய தளம் குறித்த செய்திகளை அவ்வப்போது அறிந்து கொள்ளவும் தனி பிரிவு உள்ளது. செய்திகளை தகவல்களை பகிர்ந்து கொள்ள மெசேஜ் போர்டு தரப்பட்டுள்ளது. இந்த தளத்தில் பதிவது குறித்த தொழில் நுட்ப செய்திகளுக்கும் தனியாக மெசேஜ் போர்டு தரப்பட்டுள்ளது. முதலில் இந்த தளத்தில் பதிந்து கொண்டு பின் தகவல்களை இலவசமாகப் பதியலாம்
யு–ட்யூப் ஒன்றுதான் உங்கள் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்திட அனுமதிக்கும் தளம் என்று நினைத்தால் அது தவறு. வீடியோவினைப் பகிர்ந்து கொள்ள, இன்னும் பல, ஏன் சிறந்த, வீடியோ தளங்கள் உள்ளன. அது மட்டுமின்றி உங்கள் வீடியோக்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கும் தளங்களும் உள்ளன.

அருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்த உலகமும் காணட்டுமே என்று நினைக்கிறீர்கள். அந்த எண்ணம் தோன்றியவுடன் உங்கள் நினைவில் வருவது யு–ட்யூப் இணைய தளமே. அதில் உங்கள் வீடியோவை ஏற்றி வைத்துவிட்டால் உலகெங்கும் உள்ளவர்கள் அதனைப் பார்த்து மகிழலாம்


அதிர்ஷ்டம் இருந்தால் பலர் உங்களைத் தொடர்பு கொண்டு இன்னும் சில வீடியோ படங்களைத் தங்களுக்கு எடுத்துத் தருமாறு கேட்கலாம். இதனால் பணம் சம்பாதிக்கவும் செய்திடலாம். ஆனால் ஏன் யு–ட்யூப் தளத்தை மட்டும் நாடுகிறீர்கள். என்றாவது இதைப் போல வேறு சில தளங்களும் உள்ளன என்று எண்ணியதுண்டா? வேறு இருக்கிறதா! என்று கண்கள் அகல விரிய நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. இதோ அத்தகைய தளங்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறேன்.

1. www.break.com : முதலில் பணம் மற்றும் பரிசு தரும் தளத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்த தளத்தில் ஏற்றப்படும் உங்கள் வீடியோ இத்தள நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஹோம் பேஜில் அது இடம் பெற்றால் உங்களுக்குக் கிடைக்கும் பரிசு ரூ.80,000. தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் காலரியில் வீடியோவோடு வீடியோவாக இடம் பெற்றால் பரிசு ரூ.1,000. இதில் வீடியோக்கள் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நமக்குப் பிடித்த வீடியோவினைத் தேடிப் பெறுவது எளிதாகிறது. மிக எளிமையான கண்ட்ரோல்கள் தரப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு. காண்ட்ராஸ்ட், பிரைட்னஸ் என வீடியோக்களைக் கண்ட்ரோல் செய்து பார்க்கலாம். நம்முடைய வீடியோக்களை அப்லோட் செய்வதும் எளிதாக்கப் பட்டுள்ளது.


2.www.tubemogul.com அடிப்படையில் இது ஆன்லைன் வீடியோ க்களை ஆய்வு செய்திடும் நிறுவனத்தின் இணைய தளம். இதன் மூலம் தங்களின் வீடியோக்களின் தரத்தினை மக்கள் அறிந்து கொள்ள இயலும். இதன் இன்னொரு சிறப்பு என்னவெனில் இதன் மூலம் மற்ற வீடியோ தளங்களுக்கும் வீடியோக்களை ஒரே ஷாட்டில் அப்லோட் செய்திட முடியும்.
அது மட்டுமின்றி உங்கள் வீடியோவை யார், எப்போது, எங்கிருந்து பார்க்கிறார்கள் என்பதனையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். யு–ட்யூப், கூகுள் வீடியோ, ஏ.ஓ.எல். வீடியோ, மை ஸ்பேஸ் வீடியோ, மெடாகேப், ரெவ்வர் மற்றும் யாஹூ வீடியோ ஆகிய தளங்களை இந்த தளத்தின் மூலம் பெறலாம்.

3. www.dailymotion.co: மற்ற வீடியோ இணைய தளங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பல பண்புகளைக் கொண்டது இந்த தளம். இதில் பல சேனல்கள் உள்ளன; அவை – மியூசிக், கேம்ஸ், விளையாட்டு, படங்கள், கல்லூரிகள் என பட்டியல் நீள்கிறது. இதன் பபர் ரேட் அதிகமானதாக இருப்பதால் வீடியோவினை எந்த பிரச்னையுமின்றி பார்க்க முடிகிறது. வீடியோ வால்ஸ் என்ற வசதியின் மூலம் உங்கள் தளத்தில் 81 வீடியோக்கள் வரை காட்டலாம். ஜூக் பாக்ஸ் வீடியோக்களை வகைப்படுத்திக் காண வழி செய்கிறது. இந்த தளத்தில் பதிக்கப்படும் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மட்டும் காணும்படியும் செட் செய்திடலாம்.


4. www.dailymotion.com: இந்த தளத்தைப் பற்றி சிலர் அறிந்திருக்கலாம். இதில் உள்ள பபர் மெமரி குறிப்பிடத்தக்கது. வீடியோக்களை ரீவைண்ட் செய்தும் பாஸ்ட் பார்வேர்ட் செய்தும் பார்க்கும் வசதி இந்த தளத்திலேயே தரப் பட்டுள்ளது. இதில் உள்ள பேமிலி சேப் மோட் உங்கள் குழந்தைகள் என்ன வகையான வீடியோ மட்டும் பார்க்க வேண்டும் என்பதனை வரையறை செய்திடும் வசதியினைத் தருகிறது. இதில் உள்ள டைரக்டர்ஸ் கட் வீடியோ தயாரிப்பதில் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு உதவுகிறது. இந்த சேனலில் உள்ள மெட்டகபே புரோ வீடியோ தயாரிப்பது குறித்த தகவல்களைத் தருகிறது.இதில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தால் எந்தவித வெப் பிரவுசர் இன்றி நேரடியாக வீடியோக்களை அனுப்ப முடியும்.

5. www.jumpcut.com : வீடியோ தளங்களில் உங்கள் வீடியோக்களை அப்லோட் செய்திடுகையில் வீடியோக்
களை எடிட் செய்வதற்கான டூல்ஸ்கள் இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா! அப்படியானால் இந்த தளம் தான் உங்களுக்கு உகந்தது. இதில் உள்ள ரீமிக்ஸ் என்ற வசதியினைப் பயன்படுத்தி உங்கள் வீடியோக்களை மட்டுமல்ல, மற்றவர்களின் வீடியோக்களையும் கூட எடிட் செய்து பார்க்கலாம்.


பேக்ரவுண்ட் மியூசிக், திடீர் மாற்றங்கள், காட்சிஅமைப்பு, கிளிப் ஆடியோ மற்றும் காட்சி தோற்றங்கள் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த இதில் டூல்ஸ் தரப்பட்டுள்ளன. இந்த தளத்தில் உங்கள் யாஹூ ஐ.டி. மூலமும் லாக் இன் செய்து கொள்ளலாம். இல்லை என்றாலும் இதில் பதிவு செய்வது எளிதுதான்.


6. www.revver.com: வீடியோ ஷேரிங் வெப்சைட்டாக இயங்கிய முதல் வெப்சைட் இதுதான். இதில் வெபிஸோட், அனிமேஷன், காமெடி, கேம்ஸ் மற்றும் வீடியோஸ் எனப் பிரிவுகள் உள்ளன. உங்கள் வீடியோக்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குப் பிடித்த மற்ற வீடியோக்களையும் இதில் நீங்கள் அப்லோட் செய்திடலாம். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் உங்களுக்கும் பங்கு தரப்படும். வீடியோக்களை அடிக்கடி பார்த்தது, பலரால் பகிர்ந்து பார்த்தது மற்றும் வீடியோவினை இயக்கியவர் என பதம் பிரித்துப் பார்க்கலாம். அதே போல இதன் சேனல்களும் வித்தியாசமானவை; பிரபலமானவர்கள் செய்தி, உடல்நலம் மற்றும் உடல் பாதுகாப்பு, தொழில் நுட்ப உதவி, வெபிசோட்ஸ் எனப் பல பிரிவுகளில் வீடியோக்கள் உள்ளன.


7. www.vimeo.com: மொத்தம் 6,340 சேனல்களை உள்ளடக்கியதாக இந்த தளம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல பொருட்களின் அடிப்படையிலும் நம் ஆர்வத்தின் அடிப்படையிலும் பல வீடியோக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டாப் பிக்ஸ்(Staff Picks) என்ற பிரிவில் இந்த இணையதள அலுவலர்கள் தங்களுக்கு பிடித்தது எனத் தேர்ந்தெடுத்தவற்றைக் காணலாம்.


8. www.eyespot.com: இந்த தளத்தில் உங்கள் வீடியோக்களை அப்லோட் செய்திடும் முன் அவற்றை எடிட் செய்திடலாம். போட்டோக்கள் மற்றும் மியூசிக் இணைத்து மாற்றலாம். உங்களிடம் வீடியோ இல்லை என்றால் இதில் பதிந்துள்ள வீடியோக்களை எடுத்து எடிட் உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ற வகையில் மாற்றலாம். இதற்கென மிக்ஸபிள்ஸ், ரீசன்ட் மிக்ஸஸ், ரீசன்ட் அப்லோட்ஸ், மோஸ்ட் ஸ்கில்புல் மற்றும் மொபைல் ஷேர் எனப் பல வகைகளில் வீடியோக்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. உங்கள் மொபைல் போனில் வீடியோக்களை எடுத்து நேரடியாக இந்த தளத்திற்கு வீடியோ படங்களை அனுப்பலாம். ஆனால் அனைத்து போன்களையும் இந்த தளம் ஏற்றுக் கொள்வதில்லை. நோக்கியா போன்களில் இ மற்றும் என் சிரீஸ் போன்களின் வீடியோக்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறது.


9. www.video.google.com: யு–ட்யூப் தளத்தின் இன்னொரு சகோதரி போல இது செயல்படுகிறது. யு–ட்யுப் தளத்தின் அத்தனை சங்கதிகளும் இதில் இருக்கின்றன. நீங்கள் அப்லோட் செய்த வீடியோக்களை நாள், மாதம் மற்றும் ஆண்டு வாரியாகப் பட்டியலிட்டு பார்க்கலாம்.


10. www.funnyordie.com: விழுந்து விழுந்து சிரிக்க வேண்டுமா? இந்த தளத்திற்குச் செல்லுங்கள் என்று இந்த தளம் அழைத்தாலும் பல சீரியஸ் வீடியோக்களும் இதில் உள்ளன. சில நகைச்சுவை நிகழ்ச்சிகள் படங்களாய்க் காட்டப்படுகின்றன. மேலே தரப்பட்ட தளங்களில் சில மற்றவற்றிலிருந்து வேறுபட்டுள்ளன. அதிக அளவிலான (300 எம்பி) வீடியோ பைல்களை ஏற்றுக் கொள்வது ட்யூப் மொகல் தளம். விமியோ தளம் வாரத்திற்கு 500 எம்பி அனுமதிக்கிறது. ட்யூப் மொகல் தவிர மற்ற தளங்கள் அனைத்தும் ஷேரிங் வசதியைத் தருகிறது. மெடா கேப் மற்றும் ரெவ்வர் மட்டுமே டவுண்லோடிங் வசதியைத் தந்துள்ளன. பரிசு மற்றும் பணம் தருவது பிரேக் தளம் மட்டுமே. அனைத்திலும் பதிந்து கொள்வதும் வீடியோக்களை அப்லோட் செய்வதும் இலவசமே

Wednesday, September 29, 2010

mobilepone internet browsing

தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை இதோ&&.

1. உங்கள் கையடக்க செல்லிட தொலைபேசியில் ( mobile phone) GPRS வசதியை உயிர்ப்பித்து(Active) கொள்ளவும்.
2.  கையடக்க தொலைபேசி மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினியை தரவிறக்கி ( Download) உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

3. கையடக்க தொலைபேசியில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை ( browser) திறந்து கொள்ளுங்கள்.
4. பின்பு முகவரி இடும் இடத்தில் (Address Bar)  opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.

5. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
(if enabled, text written with complex scripts will be rendered on the server instead of in your device.)

6. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள்  கையடக்க தொலைபேசியில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றி பார்க்கலாம்.

windows sortcut

Windows Key + Down Arrow
Set window to Restored (if Maximized) or Minimized (if Restored)
Windows Key + Up Arrow
Maximize window (if Restored)
Windows Key + Shift + Down Arrow / Windows Key + Shift + Up Arrow
Maximize Restored window vertically / Restore window to previous state
Windows Key + Right Arrow / Windows Key + Left Arrow
Move Restored window to left/center/right. Works across multiple monitors
Windows Key + Shift + Right Arrow / Windows Key + Shift + Left Arrow
Move window to left monitor / to right monitor when using multiple monitors
Alt + Space Bar
Opens the title bar menu
Alt + Space Bar + Enter
Restore Window
Alt + Space Bar + X
Maximize Window
Alt + Space Bar + N
Minimize Window
F11
Turn full-page view on or off
Alt + Tab
Alt + Shift + Tab
Cycle through programs. Hold Alt and continuously press Tab to move forward between applications. Add shift to reverse direction.
Alt + Esc / Alt + Shift + Esc
Cycle through programs on taskbar in the order they were opened or accessed
Windows Key + Tab
Cycle through programs using Aero Flip 3D
Ctrl + Windows Key + Tab
Cycle through programs on Taskbar using Aero Flip 3D
Windows Key + G
Cycle through Gadget Window
Windows Key + D
Minimize all windows on all Monitors. Press again to restore previous state
Windows Key + M
Minimize all windows on current Monitor
Windows Key + Shift + M
Restore previously minimized windows on current Monitor
Windows Key + Home
Set all windows to Minimized on current Monitor except active
Windows Key + Space Bar
Preview Desktop / make windows transparent (May not work with all Settings)

internet tips;-------

சில இணையதளங்கள் தனது மேலதிக சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வதனை கட்டாயமாக்கி இருக்கும். சில தளங்கள் பதிவு செய்கிற மின்னஞ்சலை ஆக்டிவேட் செய்ய சொல்லி பொறுமையை சோதிக்கும். அந்த தளங்களில் பதிவு செய்வதற்குள் அந்த தளத்தை காணும் ஆர்வமே போய் விடும்.

அவசரத்தில் ஒரு தகவலை தேடும் நமக்கு இது பெரும் சோதனைதான். இப்படி நாம் செல்லும் பதிவை கட்டாயமாக்கும் தளங்களின் சங்கடங்களில் இருந்து தப்பிக்க ஒரு தளம் வழி செய்கிறது. பதிவு செய்யாமலேயே ஏற்கனவே உள்ள பயனர் கணக்குகளை கொடுத்து லாகின் செய்து கொள்ள முடியும். 

www.BugMeNot.com - இந்த தளத்தில் பயனர்கள் பகிர்ந்து கொண்ட பல தளங்களின் பயனர் கணக்குகள் உள்ளன. அவற்றை நீங்கள் உங்களுக்கு தேவைப்படும் தளங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த தளத்திற்கு சென்று நீங்கள் வேண்டும் தளத்தின் பெயரை கொடுத்து 'Get Logins' கிளிக் செய்யவும்.

அந்த தளத்தின் பல பயனர் கணக்குகள், பாஸ்வோர்ட் பட்டியலிடப்படும். அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து உபயோகிக்கவும். அதில் வரும் எல்லா பயனர் கணக்குகளும் வேலை செய்யும் என்று கூற முடியாது. ஆனால் சில கணக்குகள் வேலை செய்கிறது.



நீங்கள் பயர்பாக்ஸ் இணைய உலாவி உபயோகிப்பவராக இருந்தால் இந்த வசதியை மிகவும் எளிமையாக ஒரு நீட்சி (Extension) மூலம் பயன்படுத்தலாம். அந்த நீட்சியை இந்த சுட்டியில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இனி நீங்கள் வேண்டும் தளத்தின் லாகின் பக்கத்திற்கு செல்லும் போது, அங்கே வலது கிளிக் செய்து கொண்டு 'Login with BugMeNot' என்பதனை தேர்ந்தெடுத்து கொள்ளவும். தானாக பயனர் கணக்கு உள்ளீடு செய்யப்படும்.

இது அனைத்து தளங்களிலும் வேலை செய்கிறதா என்றால், இல்லை.