Powered By Blogger

Thursday, September 30, 2010

சில பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் பல முன்னெழுத்துக்களை போட்டுக் கொள்வார்கள். தந்தை, பாட்டனார், முப்பாட்டனார், கொள்ளுத் தாத்தா என பின்னோக்கிய காலத்தில் முன்னோக்கி செல்வார்கள். இப்படியே எத்தனை தலைமுறையை நாம் அறிந்து கொள்ள முடியும். யாராவது அதிக வயதில் வாழும் தாத்தாவை பேச வைத்து அறிந்து கொண்டால் தான் முடியும்.

அவர் கூறுவதையும் எழுதி வைத்தால் தானே நாம் நம் சந்ததிக்குக் கொடுக்க முடியும். இதனால் பெரிய பயன் இல்லை என்றாலும் நான் இந்தக் குடும்ப மரத்தைச் சேர்ந்தவன். அதன் ஒரு கிளையிலிருந்து வந்தவன் தான்நீ என்று இன்னொருவருடன் உறவு கொள்ள முடியும். இந்த குடும்ப மரத்தின் கிளைகளை எழுதி வைத்திட ஒரு இணைய தளம் உதவுகிறது. http://www.tribalpages.com என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இங்கு உங்கள் குடும்ப மரத்தை உருவாக்கலாம். அதில் போட்டோக் களை பதிக்கலாம்.

குடும்பத்திற்கென ஒரு இணைய தளத்தை உருவாக்கி அதனை இந்த தளம் தரும் இலவச சர்வரில் போட்டு வைக்கலாம். மற்றவர்கள் அமைத்துள்ள குடும்ப பாரம்பரியத்தைப் பார்த்து நாமும் அவ்வாறு அமைக்கலாம். இவ்வாறு அமைக்கப்பட்ட குடும்ப பரம்பரையின் உறுப்பினர்களை சர்ச் இஞ்சின் மூலம் தேடி அறியலாம். இந்த இணைய தளம் குறித்த செய்திகளை அவ்வப்போது அறிந்து கொள்ளவும் தனி பிரிவு உள்ளது. செய்திகளை தகவல்களை பகிர்ந்து கொள்ள மெசேஜ் போர்டு தரப்பட்டுள்ளது. இந்த தளத்தில் பதிவது குறித்த தொழில் நுட்ப செய்திகளுக்கும் தனியாக மெசேஜ் போர்டு தரப்பட்டுள்ளது. முதலில் இந்த தளத்தில் பதிந்து கொண்டு பின் தகவல்களை இலவசமாகப் பதியலாம்

No comments:

Post a Comment