Powered By Blogger

Monday, September 13, 2010






செல்போன் டவர் சிக்னல் கிடைக்காமல் போன் செய்ய முடியாமல் தவித்திருக்கிறீர்களா? இனி டவர் இல்லாமலேயே போன் செய்யலாம். இதற்க்கு  serval project என்று பெயரிட்டிருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருடைய போன்களே செல்போன் டவர்களாக செயல்படும். அதாவது wi-fi தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அருகிலுள்ள போன்களின் மூலம் நமக்கு தேவையான எண்களுக்கு அழைப்புகளை செய்யலாம். mesh network technology இல் இது செயல்படுகிறதாம். mesh network என்பது ஒவ்வொரு nodeகளும் தனி routerகளாக செயல்படும் network அமைப்பாகும். இங்கு நம்முடைய phoneகளே தனி routerகளாக செயல்பட்டு இணைப்பை ஏற்ப்படுத்தும்.
            ஆனால் இவ்வகை இணைப்பை ஏற்ப்படுத்த குறிப்பிட்ட எல்லைக்குள் வேறொரு மொபைலும் இருக்க வேண்டும். எனவே இது மக்கள் தொகை மிகுந்த பகுதிகளில் தான் பயன்படும். ஆனால் இதன் உண்மையான பயன் இதுவல்ல. இயற்க்கை பேரிடர் காலங்களில் செல்போன் டவர் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் பாதிக்கப்படுவதால், தகவல் தொடர்பு என்பதே கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டு விடுகிறது. இது போன்ற காலங்களில் இவ்வகை அமைப்பு டவர் தேவை இல்லையென்பதால் பெரும்பயன்களை கொண்டிருக்கும். haiti நிலநடுக்கத்தின் போது இரண்டு நாட்களுக்கு மொபைல் மற்றும் லேன்ட் லைன் போன் இணைப்புக்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதிலிருந்து தான் இவ்வகை அமைப்பை உருவாக்க தூண்டியாதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த gardner-stephen கூறுகிறார். இத்தொழில்நுட்பத்தின் மூலம் பேரழிவு நிகழ்ந்த உடனேயே வெளிதொடர்புகளை ஏற்படுத்த முடியுமென்பதால் நிவாரணப் பணிகளை உடனுக்குடன் செயல்படுத்த முடியும்.

No comments:

Post a Comment