Powered By Blogger

Saturday, September 25, 2010

online alarm

உங்கள் கம்ப்யூட்டருடன் உள்ள இன்டர்நெட் இணைப்பு நீக்கப்பட்டுவிட்டாலும் உங்களை எழுப்பும் அலாரம் தருவதுதான் KuKu Klok என்ற ஆன்லைன் அலாரம். இதுhttp://kukuklok.com/ என்ற தளத்தில் கிடைக்கிறது. 


இந்த தளம் சென்றவுடன் அதில் காட்டப்பட்டுள்ள டிஜிட்டல் கடிகாரத்தில் ப்ளஸ் அல்லது மைனஸ் அடையாளத்தில் கிளிக் செய்து நீங்கள் விரும்பும் நேரத்தை செட் செய்திடவும். அலாரத்திற்கான நேரம் செட் செய்யப்பட்டவுடன் உங்களுக்கு எந்த சத்தம் கொண்டு எழுப்ப என்பதனை செட் செய்திட வேண்டும். சேவல் கூவுவது, எலக்ட்ரானிக் கிடார் என நான்கு வகையான ஒலிகள் தரப்பட்டுள்ளன. இவை எப்படி இருக்கும் என சோதித்தும் பார்க்கலாம். இந்த இரண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் Set Alarm என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது அலாரம் ரெடி. உங்கள் இன்டர்நெட் இணைப் பினைத் துண்டித்து விட்டாலும் குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடித்து உங்களை எழுப்பிவிடும். அலாரம் செட் செய்த பின் Set Alarm பட்டன் Cancel பட்டனாக மாறிவிடும். எனவே நேரம் அல்லது அலாரம் ஒலியினை நீங்கள் மாற்ற வேண்டும் என எண்ணினால் மாற்றிவிடலாம். அலாரம் அடிக்கையில் இந்த பட்டன் Stop பட்டனாக மாறிவிடும். அலாரம் அடித்துக் கொண்டிருக்கையில் இதனை அழுத்தினால் அலாரம் அடிப்பது நின்றுவிடும்.

No comments:

Post a Comment