Powered By Blogger

Monday, September 13, 2010

  எதிர்காலத்தை பற்றிய கணிப்பு என்றவுடன் இது ஆக்டோபஸ் ஜோதிடமோ அல்லது கிளி ஜோதிடமோ என்று எண்ண வேண்டாம். இது இறந்தகால மற்றும் நிகழ்கால தரவுகளை சில மேம்படுத்தப்பட்ட லாஜிக்களுக்கு உட்படுத்துவதன் மூலம் எதிர்கால வாய்ப்புகளை கணிக்கும் தொழில்நுட்பம் கொண்ட ஒரு தளம் பற்றிய பதிவு இது. recorded future என்ற இந்த தளம் செய்தி தளங்கள், ப்ளாக் மற்றும் twitter தளங்களை ஸ்கேன் செய்வதோடு அரசு தளங்கள் financial database என அனைத்து தகவல்களையும் scan செய்கிறது. இதில் கிடைக்கும் துறை சார்ந்த தகவல்களை பிரித்து வரிசைப்படுத்தி இதன் மூலம் எதிர்வரும் நிகழ்வுகளை கணித்து தருகிறது. இத்தளம் financial markets geopolitical, industrial analysis என பலத்துறைகளில் செயல்படுகிறது இங்கு குறிப்ப்பிடப்படாத துறைகளையும் நாம் இங்கு இணைக்க பரிந்துரைக்கலாம். தகவல்களை புள்ளிவிவரங்கள் ஆகவும் graphகள் ஆகவும் கொடுக்கிறது. இத்தளத்தை பயன்படுத்த sign up செய்து கொள்ளவேண்டும். இச்சேவை இலவசமாகவும், premium ஆகவும் கிடைக்கின்றது. எதிர்கால குறிப்புகளை ஈமெயில் அலெர்ட்களாகவும் பெற இயலும். premium கணக்கில் இலவச கணக்கைவிட அதிக வசதிகளை இத்தளம் தருகிறது. எங்கே என்ன நிகழ்வுகள் எப்போதைய நிகழ்வுகள் என குறிப்பிட்டு காண முடியும். ஆனால் இதற்க்கு மாதம் 149 டாலர் கட்டவேண்டும். 


 இது நிகழ்தகவுகளுடன், பயன்பாட்டு வேகம், உணர்வு நிலை அழுத்தம் என சில விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டாலும் நிச்சயமாக முழுமையான கணிப்பைக் கொண்டிருக்க முடியாது. ஆனாலும் இது இனி புதிய எல்லைகளை தொடக்கூடும். ஏனெனில் இது போன்ற ஆன்லைன் தொழில்நுட்பத்தில் முன்னோடியான கூகுளும், நிகழ்வுகளை கணிக்கும் செயற்கை நுண்ணறிவை ஏற்கனவே ஊக்குவித்துவரும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIAவும்  இதில் முதலீடு செய்திருப்பதே எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய விஷயம் தான். 

No comments:

Post a Comment