Monday, September 13, 2010

discovery news

   சிபயனிப்பவர்களாகல மாதங்களாகவே discovery சேனலில் நிகழ்ச்சிகளை தமிழில் ஒளிபரப்புகிறார்கள். மொழிபெயர்ப்பும் தமிழ் சேனல்களின் தமிழை விட சிறப்பாகவே இருக்கிறது. நிகழ்ச்சிகளும் நல்ல தரமானவைகளாக கொடுக்கிறார்கள். திங்கட்கிழமைstephen hawking ஸ்பெஷல்  என்று வேற்று கிரகவாசிகளின்  இருப்புகளுக்கான சாத்தியக்கூறுகளைப்  பற்றியும், இருந்தால் அவர்கள் எப்படி இருக்கலாம், எங்கு இருக்கலாம் என்பதாக பல விசயங்களைப் பற்றி அவருடைய அனுமானங்களை காட்டினார்கள். அவற்றின் சாராம்சத்தை இங்கு தரலாம் என்றிருக்கிறேன்.      வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு  இப்பிரபஞ்சம் மிகப்பெரியது (எல்லைகளற்றது ?) பல நட்சத்திரங்கள் சேர்ந்த நட்சத்திர மண்டலங்களையும், கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களையும் கொண்டது. நட்சத்திரங்களை பலகிரகங்கள் சுற்றி வரலாம். . எனவே இவ்வளவுப் பெரிய பிரபஞ்சத்தில் உயிரினங்கள் இருப்பதற்கு சாதகமான கிரகங்கள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்கிறார்.        

அப்படி இருக்குமானால் தண்ணீர் அதற்க்கு அத்தியாவசியம் ஆகும். நீர் திரவ வடிவில் இருப்பதற்கு சரியானா வெப்பநிலை நிலவ வேண்டும். சூரியக் குடும்பத்தில் அப்படியான வெப்பப் பரப்பிற்குள் பூமி மற்றும் செவ்வாய் ஆகிய இருகிரகங்கள்  வருகின்றன. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கு  ஆதாரமாக spirit rover புகைப்படங்களை அனுப்பியுள்ளது. எனினும் தற்போது அங்கு திரவ வடிவில் நீர் இருக்க வாய்ப்பில்லை. பணிப்படலமாக உள்ளது. மேலும் வியாழனின் துணைக்கோளான europa விலும். தண்ணீர் இருக்கலாம். சூரியக்குடும்பத்தை விட அதற்கு வெளியே பல ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திர மண்டலங்களில் இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.           அப்படி அந்த நட்சத்திர மண்டலங்களில் வாழ்பவை, பூமியில் உள்ள உயிரினங்களை  போன்றோ  அல்லது மாறுபட்டோ இருக்கலாம். ஏன் , நம்மால் உயிரினங்கள் என்று ஏற்றுக்கொள்ள இயலாதவையாக  கூட இருக்கலாம். அவை நுண்ணுயிர்களின் மேகக்கூட்டங்களாக வாழலாம். ஒருவேளை  அவை  கடினப்பரப்பில் வாழ்பவையாக இருந்தால், அவற்றிற்க்கு கால்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அங்கு ஒளி இருந்தால் கண்கள் இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. அவற்றின் மூலம் அவைகளின் வேட்டை விலங்குகளிடமிருந்து  தற்காத்துக்கொள்ளும் பரிணாமத்தை அடைந்திருக்கும்.           
         
               இவற்றின் அடிப்படை மூலமாக தண்ணீர் இருக்கலாம் இல்லையென்றால் தண்ணீருக்கு பதிலாக இருக்ககூடிய  தகுதி நைட்ட்ரஜனுக்கு உண்டு. நைட்டுராஜன் பூமியில் வாயு வடிவில் இருந்தாலும், மைனஸ் 160  டிகிரியில் திரவநிலைக்கு மாறும். நைட்டுரஜனோடு குறிப்பிட்ட அளவில் பாஸ்பரஸ், கால்சியம்,மற்றும் இரும்பும் தேவைப்படும். இவற்றோடு  கார்பனுக்கும் முக்கியப்பங்கு இருக்கு. கார்பனுக்கு பதிலாக சிலிக்கனும் இருக்கலாம்.சிலிக்கன் மாறுப்பட்ட சேர்மங்களை உருவாக்கினாலும் அடிப்படைப் பொருட்களோடு பொதுப் பண்பினை கொண்டிருக்கும். ஒருவேளை அவை மின்னல்களிளிருந்தும் சக்தியைப் பெறுபவையாக  இருக்கலாம்.         
       
            நாம் அவர்களை சந்திப்போமா? தகவல் பறிமாறுவோமா? ஆம், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை விட, என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே முக்கியம். அவர்கள் நம்மைவிடவும் பரிணாமத்தில் முன்னேரியவர்களாகவும் இருப்பார்கள். பரிணாமத்தின் எல்லைகளை நம்மால் அறுதியிட்டு கூற இயலாது. எனவே அவர்களை தொடர்புக்கொள்ளும் நம்முடைய முயற்சிகளில் நாம் கவனமாகவே இருக்க வேண்டும். ஆனால் அவர்களை தொடர்புக்கொல்வதும் அவ்வளவு சுலபமல்ல. அவர்கள் குறைந்தது 200 ஒளியாண்டுக்கு அப்பால் இருந்தாலும் நம்முடைய ரேடியோ சிக்னல்கள் அவர்களை சென்றடைய 200 ஆண்டுகள் ஆகும். அவர்களை அறிந்துக்கொள்ள இன்னும் மிக அதிக மேம்பட்ட தொழில்நுட்பங்களை நாம் உருவாக்க வேண்டும். அவர்களும் தொடர்புக்கொள்ள  முயற்சிக்கிறார்களா ? என நாமும் ரேடார்களில் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இதுவரை குறிப்பிடுமாறு சிக்னல்களைப் பெறவில்லை. ஒரே ஒன்றைத்தவிர. 1977 இல் அந்த சிக்னல் பெறப்பட்டது. அதை கம்ப்யூட்டர் எண்களாகவும், எழுத்துக்களாகவும் என்னத்தகதாக பதிவு செய்தது. சிக்னல் வந்த பகுதியில் கவனம் செலுத்தியும், அடுத்த சிக்னல்களை பெற இயலவில்லை. தகவல்களாக கருதத்தக்க இவ்வியாப்பான சிக்னல் wow signal என்றே குறிப்பிடப்படுகிறது.           அவர்கள் தொழில்நுட்பத்தில் மேம்பட்டு விண்வெளியில் குடியிருப்புகளை அமைக்க பயணிக்கலாம். வழியில் உள்ள கிரக கனிமங்களை எரிப்பொருளாக பயன்படுத்துவர்களாக இருந்தால் சூரியக்குடும்பத்தில் நுழையும் போது நம்நிலை? மேலும் அவர்கள் சூரிய நட்சத்திர  சக்திகளையே எடுத்து சேமிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கலாம். எனவே wormholeகளை பயன்படுத்தி  இருந்தாலும் ஆச்சரியப்படத்தக்கதல்ல. No comments:

Post a Comment