Powered By Blogger

Sunday, September 12, 2010

நேரடி ஒளிபரப்பு






மொழி கடந்து இந்தியா முழுக்க ரசிக்கப்படும் ஒரே விஷயம் கிரிக்கெட். ஒரு நிறுவனம் தயாரிப்பை இந்திய எங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதன் விளம்பரத்தில் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரரை போட்டால் போதுமானது. உலகமெங்கும் கிரிக்கெட் ரசிக்கப்பட்டாலும், இந்தியாவில் வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் நாம் வேலையில் இருந்தாலும் கிரிக்கெட் ஆட்டம் பற்றிய நினைப்பு நமது மூளையில் ஒடிக் கொண்டே இருக்கும். பதிவுலகில் கூட பரவசமூட்டும் கிரிக்கெட் பதிவுகள் சிலவற்றை படித்து இருக்கிறேன். கிரிக்கெட் பற்றி எழுதுவதில் பதிவர் லோஷன் கில்லாடி. 

இணையம் மிகப்பெரிய ஊடகமாக இருந்தாலும் இதில் கிரிக்கெட் ஆட்டங்களை நேர்மையான முறையில் பார்த்து ரசிக்க ஒழுங்கான வழிமுறை இல்லை. அனுமதியின்றி இணைய பயனர்கள் கிரிக்கெட் ஆட்டங்களையும், ஹைலைட்ஸ்களையும் இணையத்தில் ஒளிபரப்பி வருவர். வீடியோ தளங்களில் கிரிக்கெட் ஆட்டங்கள் ஏற்றப்படுவதும், பின்பு தடை செய்யப்பட்டு தூக்கப்படுவதும் வழக்கமானவை. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பை இணையைத்தில் வழங்கினாலும் அவற்றின் சேவை தரமின்றி இருக்கின்றன.


கிரிக்கெட் காய்ச்சலை காசாக்குவதற்கு ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றன IPL ஆட்டங்கள். இந்த ஆட்டங்கள் நடக்கும் நாட்களில் மக்கள் மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மறந்து குடும்பத்தோடு ஐபிஎல் ஆட்டங்களை தொலைக்காட்சியில் ரசிப்பதை காண முடிகிறது. 

மும்பை குண்டுவெடிப்பால் சென்ற ஆண்டு தாமதமாக தென்னாப்ரிக்கா சென்று நடத்தினார்கள். இந்த ஆண்டு இந்தியாவிலேயே மார்ச் முதல் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. சென்ற ஆண்டுகள் ஐபிஎல் தனது ஆட்டங்களை தனது அதிகாரபூர்வ தளத்தில் ஒளிபரப்பினாலும் சேவை தரத்தில் பல குளறுபடிகள். திருப்தியின்மை. இணைய வீடியோ ஒளிபரப்பில் அதி தொழில்நுட்பம் கொண்ட அனுபவசாலிகளாலேயே சிறந்த சேவை தர முடியும். 

சிலர் அலுவலகத்தில் ஒரு பக்கம் கிரிக்கெட் தளங்களை திறந்து வைத்து கொண்டு கிரிக்கெட் ஸ்கோர்களை, வர்ணனனைகளை பார்த்து கொண்டு இருந்தால்தான் அவர்களுக்கு வேலையே ஓடும். உலகில் சில நாடுகளில் இந்த கிரிக்கெட் ஒளிபரப்புக்காக மக்கள் சில சேனல்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்கள். 3G, வாயர்லேஸ் இணைய இணைப்புகள் வந்து விட்ட பின்பு செல்லுமிடமெல்லாம் மடிக்கணினிகள் வாயிலாகவோ, மொபைல் வாயிலாகவோ காண இணையம் மூலம் தரமான ஒளிபரப்பு தேவைப்படுகிறது.


இது போன்று குறைபட்டு கொண்டிருந்தவர்களுக்கு இனிக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. ஐபிஎல் ஆட்டங்கள் நேரடியாக இந்த வருடம் யூடியுபில் ஒளிபரப்ப படும் என்பதே அது. யூடியுப் கிரிக்கெட் ஆட்டங்களை ஒளிபரப்புவது இதுவே முதல்முறை. 45 நாட்கள் நடைபெறும் 60 ஐபிஎல் ஆட்டங்களை நீங்கள் யூடியுபில் நேரடி ஒளிபரப்பாக கண்டு ரசிக்க முடியும்.

ஹைலைட்ஸ், வீரர்களின் பேட்டிகள், ஆட்டகள அறிக்கை, பரிசளிப்பு நிகழ்ச்சி முதலியவையும் யூடியுபில் பதிந்து தரப்போகிறார்கள். இவற்றை நீங்கள் இணைய இணைப்புள்ள மொபைலில் கூட பார்த்து கொள்ள முடியும். யூடியுபில் ஒளிபரப்ப இரண்டு ஆண்டுகளுக்கு உரிமையை கூகிள் நிறுவனம் வாங்கி உள்ளது. விளம்பர வருமானங்களை ஐபிஎல்லும், கூகுளும் பகிர்ந்து கொள்ளும்.

யூடியுபின் http://www.youtube.com/ipl சேனலில் ஆட்டங்களை நீங்கள் பார்த்து கொள்ள முடியும். ஐபிஎல் 2010 ஆட்ட கால அட்டவனையை இந்த சுட்டியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஆட்டங்களை தொலைக்காட்சியில் இந்தியாவில் சோனி மேக்ஸ் ஒளிபரப்புகிறது.

1 comment:

  1. கருத்துகளை தெரிவியுங்கள்

    ReplyDelete